இந்தியா

ஆங்கிலத்தில் பேசியதால் பல்கலை., மாணவன் மீது நாயை ஏவிய கடைக்காரர்… டெல்லியில் நடந்த கொடூரம்!

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலிஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலத்தில் பேசியதால் பல்கலை., மாணவன் மீது நாயை ஏவிய கடைக்காரர்… டெல்லியில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆங்கிலம் பேசிய டெல்லி பல்கலைக்கழக மாணவன் மீது நாயை ஏவிவிட்டு தாக்குதல். பலத்த காயமடைந்த மாணவன் சிகிர்ச்சைக்காக அனுமதி.

உத்தராகண்ட் மாநிலம் டெராடூனைச் சேர்ந்த மாணவன் அன்சுமான் தாபா டெல்லி பல்கலைக்கழக கல்லூரியில் படித்துவருகிறார்.

இவர் தங்கியுள்ள மாளவிகா நகர் பகுதியில் இரவு கடை தெருவுக்குச் சென்றபோது ஆங்கிலத்தில் பேசியதற்கு ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து எழுந்த வாக்குவாதத்தை தொடர்ந்து மாணவனை நேப்பாளி என்று கூறி அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

பின்னர், தன்னுடைய வளர்ப்பு நாயை ஏவிவிட்டு அந்த மாணவனை தாக்கியுள்ளார். நாய் மாணவனின் உடலில் பல இடங்களில் கடித்து குதறியுள்ளது. அதில் காயமடைந்த மாணவனை பின்னர் நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலிஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே ஒன்றிய பாஜக அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் அவர்களின் சதிக்கு தீணி போடும் வகையில் அமைந்திட கூடாது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories