இந்தியா

”தேச துரோக சட்டம் ஒரு நல்ல சட்டம்” : வாய்தா வாங்கி வந்த பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?

”தேச துரோக சட்டம் ஒரு நல்ல சட்டம்” : வாய்தா வாங்கி வந்த பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேசவிரோத சட்டம் நல்ல சட்டம். அதனை ரத்து செய்ய தேவை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஒருவரை ஒருக்கும் நோக்கில் போடப்படும் தேச விரோத வழக்குகளால் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் அதனை நீக்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பி பத்தி மாதங்கள் ஆகியும் ஒன்றிய அரசு எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யாமல் வாய்தா மட்டுமே வாங்கி வந்தது.

”தேச துரோக சட்டம் ஒரு நல்ல சட்டம்” : வாய்தா வாங்கி வந்த பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?

இந்த நிலையில், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் கடந்த மே 6ம் தேதி விசாரணையை தொடங்கியது. இதனையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “தேச விரோத சட்டம் மிக நல்ல சட்டம். அரசியல் சாசனத்தை சமநிலையில் அணுகும் சட்டம். 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதனை மறு ஆய்வு செய்ய தேவையில்லை.

சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து வழக்கு தொடர்பான விசாரணை நாளை (மே 9) மீண்டும் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு.

banner

Related Stories

Related Stories