இந்தியா

NAP டைம் ஒதுக்கி மெயில் அனுப்பிய பெங்களூரு நிறுவனம்.. ஆச்சர்யத்தில் ஊழியர்கள்.. வரவேற்கும் நெட்டிசன்ஸ்!

NAP டைம் ஒதுக்கி மெயில் அனுப்பிய பெங்களூரு நிறுவனம்.. ஆச்சர்யத்தில் ஊழியர்கள்.. வரவேற்கும் நெட்டிசன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வகுப்பறையோ, அலுவலகமோ எந்த இடமாக இருந்தாலும் மதிய உணவுக்கு பிறகு அனைவருக்குமே லேசாக தூங்கும் எண்ணம் வருவது வாடிக்கையே.

குறிப்பாக அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அந்த தூக்கத்தை கட்டுப்படுத்தி வேலை செய்யும் மனநிலை ஏற்கெனவே இருக்கும் பனிச்சுமையால் வரும் மன உளைச்சலை மேலும் அதிகமாக்கும்.

இதனால் பணியிடங்களில் POWER NAP எனும் சிறிது நேரமாவது தூங்கும் நேரத்திற்கு நிறுவனங்கள்

அனுமதிக்க வேண்டும் என உலகில் உள்ள பெரும்பாலான நாட்டு ஊழியர்களின் தீர்க்கப்படாத வேண்டுகோளாகவே (ஜப்பானை தவிர) இருந்து வருகிறது.

இப்படி இருக்கையில் இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த WAKE FIT என்ற மெத்தை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு தூங்குவதற்கு அனுமதியளித்து மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறது.

அதில், “இனி அலுவலகத்தில் power nap எடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதற்காக பிற்பகல் 2 முதல் 2.30 மணி வரையில் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனை குறிப்பிடுவதற்காக nap pods என்ற கருவியும் பொருத்தப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

வேக் ஃபிட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதில் இருந்தே நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.

முன்னதாக நாசாவின் ஆய்வுப்படி பணி நேரத்தின் போது 26 நிமிடங்கள் ஊழியர்கள் தூங்கி எழுந்தால் அவர்களின் செயல்திறன் 33 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும் வேக் ஃபிட் நிறுவனம் ஊழியர்களுக்கான தனது மெயிலில் குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories