இந்தியா

பத்தே நாளில் அடுத்த அவலம்.. மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை; வடமாநிலமாக மாறியதா ஆந்திரா?

ஆந்திராவில் இறந்த மகனின் சடலத்தை அவரது தந்தை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தே நாளில் அடுத்த அவலம்.. மகனின் உடலை பைக்கில் எடுத்து சென்ற தந்தை; வடமாநிலமாக மாறியதா ஆந்திரா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்த தனது மகனின் சடலத்தைக் கொண்டு செல்வதற்கு இலவச ஆம்புலன்ஸில் ஓட்டுநர் அதிகப் பணம் கேட்டதால், அவரது தந்தை மகனின் உடலை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாத நிலையில் மீண்டும் இதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆகிய இரண்டு சிறுவர்கள் புதன்கிழமையன்று கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை உறவினர்கள் மீட்டிருக்கிறார்கள்.

இதில் ஈஸ்வரின் உடலை அவரது உறவினர்கள் நேரடியாக வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஸ்ரீராம் உடலை அவரது பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகனின் உடலை எடுத்துச் செல்வதற்காக இலவச ஆம்புலன்ஸை அழைத்திருக்கிறார்.

அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இலவசமாக எல்லாம் செல்ல முடியாது என கூறி வர மறுத்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத தந்தை, மகனின் உடலை ஸ்கூட்டரிலேயே வீடுவரை எடுத்து சென்றுள்ளார்.

அதேபோல், நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து, தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த தனது மகளின் உடலை மோட்டார் சைக்கிளில் தந்தை சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மூன்று சம்பவங்கள் இதேபோன்று நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து இதேபோன்ற அவலங்கள் அரங்கேறியுள்ளதால், சுகாதாரத்தில் ஆந்திரா வடமாநிலமா மாறி வருகிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories