இந்தியா

வேலியே பயிரை மேய்வதா ?.. புகார் கொடுக்க சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த போலிஸார்: உ.பி-யில் கொடூரம்!

உத்தரப் பிரதேசத்தில் புகார் கொடுக்க சென்ற சிறுமியை போலிஸாரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலியே பயிரை மேய்வதா ?.. புகார் கொடுக்க சென்ற சிறுமியை வன்கொடுமை செய்த போலிஸார்: உ.பி-யில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், பாலி பகுதியைச் சேர்ந்த சந்தன், ராஜ்பான், ஹரிசங்கர் மற்றும் மகேந்திர சௌராசியா ஆகிய நான்கு சிறுவர்கள் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை ஏமாற்றி போபாலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிறகு அங்கு அச்சிறுமியை மூன்று நாட்களுக்கு நான்கு சிறுவர்களும் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு மீண்டும் சிறுமியைப் பாலி பகுதிக்கே அழைத்துவந்து விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலிஸார் சிறுமியை காவல்நிலையம் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காவல்நிலைய அதிகாரி திலக்தாரி சரோஜ், சிறுமியைத் தனியாக அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு சிறுமியையும் அவரது அத்தையையும் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். அங்கு சிறுமியிடம் விசாரணை செய்த அதிகாரிகளிடம், நான்கு சிறுவர்கள் உட்பட காவல் நிலைய அதிகாரி செய்த வன்கொடுமை சம்பவத்தி சிறுமி தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் காவல் அதிகாரி மற்றும் சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை அடுத்து திலக்தாரியை பணியிடை நீக்கம் செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற சிறுமியை போலிஸாரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories