இந்தியா

இலங்கையாக மாறும் இந்தியா? : 3 மாதத்தில் ரூ.457 உயர்வு.. மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்திய மோடி அரசு !

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான LGP சிலிண்டரின் விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,355.50க்கு விற்பனையாகியுள்ளது.

இலங்கையாக மாறும் இந்தியா? : 3 மாதத்தில் ரூ.457 உயர்வு.. மீண்டும் சிலிண்டர் விலையை உயர்த்திய மோடி அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒன்றிய அரசு, ஒவ்வொரு மாதமும், முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் இன்று வழக்கம்போல் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப்பின், டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை 2,355.50 ஆக உள்ளது.

சென்னையில் 2,406 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதேபோல் அதேசமயம் சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.2406ல் இருந்து ரூ.2508 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.965.50 ஆக உள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரலில் வணிக சிலிண்டரின் விலை ரூ.250 வரை உயர்த்தப்பட்டது. அதற்கு முன் மார்ச் மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது ரூ.102.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதத்துக்கு பின் இப்போது வரை வணிக சிலிண்டர் விலை மொத்தமாக 457 ரூபாய் உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மீதான சுமை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அடித்தட்டு மக்கள் தலையில்தான் விழுகிறது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ள நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இலங்கை நிலைக்கு இந்தியா ஆளாகுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories