இந்தியா

மலைப்பாதையில் பைக் ரைடு : திடீரென உருண்டு விழுந்த பாறை.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - பதறவைக்கும் Video!

வயநாடு மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பைக் மீது பாறை சரிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைப்பாதையில் பைக் ரைடு : திடீரென உருண்டு விழுந்த பாறை.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள் - பதறவைக்கும் Video!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் சில நாட்களாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பைக்கில் வெகுதூரம் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ஆபத்தான முறையில் சாகசம் செய்து உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் மூன்று இருசக்கர வாகங்களில் நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது வயநாடு மலைப்பாதையில் தாமரைக் கடவு பகுதியில் உள்ள 6வது கொண்டை ஊசி வளைவில் திடீரென சரிந்த பாறை அபிநாத், ஆனந்த் ஆகியோர் பயணம் செய்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் அபிநாத், ஆனந்த் ஆகியோர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் அபிநாத் உயிரிழந்தார். ஆனந்த் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories