இந்தியா

மகனை விடுவிக்க கேட்டு வந்த பெண்ணிடம் மசாஜ் செய்ய கூறிய பீகார் போலிஸ்.. காவல்நிலையத்தில் நடந்த அவலம்!

மசாஜ் செய்யும் அந்த பெண் ஜெயிலில் உள்ள தனது மகனை விடுவிக்கும்படி கோரிக்கை விடுக்க போலிஸாரை பார்த்திருக்கிறார்.

மகனை விடுவிக்க கேட்டு வந்த பெண்ணிடம் மசாஜ் செய்ய கூறிய பீகார் போலிஸ்.. காவல்நிலையத்தில் நடந்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் சஹர்ஸா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலிஸ் அதிகாரிக்கு பெண் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து சஷிபூஷன் சின்ஹா என்ற போலிஸார் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

நெளஹட்டா காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சஹர்ஸா பகுதியின் காவல் துறை அதிகாரியாக இருந்தவர் சஷிபூஷன் சின்ஹா.

சமூக வலைதளங்களில் வைரலான அந்த 33 நொடி வீடியோவில் பெண் ஒருவர், மேல் ஆடை ஏதும் இன்றி காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் சஷிபூஷனுக்கு மசாஜ் செய்வது இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணையில், மசாஜ் செய்யும் அந்த பெண் ஜெயிலில் உள்ள தனது மகனை விடுவிக்கும்படி கோரிக்கை விடுக்க போலிஸாரை பார்த்திருக்கிறார்.

அப்போது, பெண்ணின் மகனை விடுவிக்க வேண்டுமென்றால் தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என சஷிபூஷன் வற்புறுத்தியிருக்கிறார். வேறு வழியின்றி அப்பெண்ணும் போலிஸாருக்கு மசாஜ் செய்திருக்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் சஷிபூஷன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories