இந்தியா

PM Cares விவகாரம்: ”ஒன்று அரசு நிதியாக அறிவியுங்கள்; இல்லையேல் பிரதமர் படத்தை நீக்குங்கள்” - காரசார வாதம்

இந்த நிதி பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.

PM Cares விவகாரம்: ”ஒன்று அரசு நிதியாக அறிவியுங்கள்; இல்லையேல் பிரதமர் படத்தை நீக்குங்கள்” - காரசார வாதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பி.எம்.கேர்ஸ் நிதியை அரசு நிதியாக அறிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் பிரதமர் படம் மற்றும் தேசிய சின்ன முத்திரையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இந்த நிதி பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.

தனிப்பட்ட முறையிலான நிதியாக அதனைப் பயன்படுத்தினால் ஒன்றிய அரசின் இணைய தளத்தையோ, அலுகலகத்தையோ அதற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. துணை குடியரசு தலைவர், ஒன்றிய அமைச்சர்கள் இதனை ஒன்றிய அரசு நிதி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

உலகத்தார் முன்பாக இந்திய அரசின் நிதி என்று கூறித்தான் பி.எம்.கேர்ஸ் பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய நிலையே தொடர அனுமதித்தால் முறைகேட்டுக்கு வழிவகுக்கும். நாளை இது தனியார் நிறுவனமாகக்கூட மாற வாய்ப்புள்ளது என்று வாதிட்டார்.

banner

Related Stories

Related Stories