இந்தியா

”8 வருடமாக நீங்கள் பேசிய பேச்சுக்கு 8 நாட்களுக்குதான் நிலக்கரி இருக்கு” - மோடியை விளாசிய ராகுல் காந்தி!

இந்தியாவில் 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

”8 வருடமாக நீங்கள் பேசிய பேச்சுக்கு 8 நாட்களுக்குதான் நிலக்கரி இருக்கு” - மோடியை விளாசிய ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் கடும் மின்வெட்டு பிரச்சனை எழுந்தது. தற்போது மீண்டும் சில மாநிலங்களில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே.சிங், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 8 ஆண்டுகளாக பேசியதன் விளைவாக தற்போது நிலக்கரி கையிருப்பு 8 நாட்கள் மட்டுமே உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "எட்டு ஆண்டுகளாக நீங்கள் பேசிய பேச்சுகளால், வெறும் எட்டு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது என்ற நிலைக்கு இந்தியாவை கொண்டு வந்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வருகிறது. மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் நசுங்கி வருகிறது. வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. வெறுப்புணர்வு மீது புல்டோசரை ஏற்றி பரப்புவதை நிறுத்தி, மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்" என பிரதமர் மோடியையும் அவரது அமைச்சரவைக்கும் தனக்கே உரிய பாணியில் அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories