இந்தியா

மாலை மாற்றிய நேரத்தில் கல்யாண மாப்பிள்ளைக்கு பளார் விட்ட மணமகள்.. உ.பியில் நடந்த சுவாரஸ்யம்..!

மணமகன் மணப்பெண் கழுத்தில் மாலையிட்ட போது அப்பெண் மணமகனை அனைவரது முன்னிலையிலும் பளார் என அறைந்திருக்கிறார்.

மாலை மாற்றிய நேரத்தில் கல்யாண மாப்பிள்ளைக்கு பளார் விட்ட மணமகள்.. உ.பியில் நடந்த சுவாரஸ்யம்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் பெரும்பாலும் கலட்டா கல்யாணமாகவே முடிந்திருக்கிறது. அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் கல்யாண மேடையில் மாலை மாற்றியபோது மணமகனை மணப்பெண் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹமிர்பூர் பகுதியில் உள்ள ஸ்வாசா புஜ்கர் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போதுதான் சம்பவம் நடந்திருக்கிறது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவருக்கும் நடக்கும் சடங்குகள் நடைபெற்ற போது மணமக்கள் இருவரும் பரஸ்பரம் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

அப்போது மணமகன் மணப்பெண் கழுத்தில் மாலையிட்ட போது அப்பெண் மணமகனை அனைவரது முன்னிலையிலும் பளார் என அறைந்திருக்கிறார்.

இந்த நிகழ்வு அங்கே திரண்டிருந்த இருதரப்பு உறவினர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மணப்பெண் மற்றும் மணமகன் உறவினரிடையே வாய்த்தகராறு முற்றியிருக்கிறது.

பின்னர் இது தொடர்பான தகவல் லால்புரா காவல்நிலையத்திற்கு செல்ல, போலிஸார் உடனடியாக திருமணம் வீட்டிற்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து கலைத்து அனுப்பினர்.

மணமகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் என்பதாலேயே மணமகள் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பான பரபரப்பு அப்பகுதி மக்களிடையேவும் பரவி பேசுபொருளானது.

banner

Related Stories

Related Stories