இந்தியா

போலி பத்திரம் மூலம் பிரான்ஸில் வசிப்பவரின் சொத்துகளை அபகரிக்கும் புதுச்சேரி அதிமுக Ex MLA குடும்பத்தினர்!

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்த புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகனின் குடும்பத்தினர் மீது cbcid காவல் நிலையத்தில் புகார்.

போலி பத்திரம் மூலம் பிரான்ஸில் வசிப்பவரின் சொத்துகளை அபகரிக்கும் புதுச்சேரி அதிமுக Ex MLA குடும்பத்தினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி உப்பளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் முதலியார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ்பாபுவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ”பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமிதேவி என்பவருக்கு சொந்தமான புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியில் 890 சதுரடி கொண்ட வீடு உள்ளது. இந்த இடத்தை 12 .8.2020 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த சூசைராஜ் என்பவரின் மகனான அந்தோணி ராஜிக்கு, பூமிதேவி பொது அதிகாரம் கொடுத்ததாக போலி ஆவணம் தயார் செய்யப்பட்டு 29.9.2020 அன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தால் அட்டஸ் செய்யப்பட்டதாக ஒரு பத்திரத்தை உருவாக்கி, அதைக்கொண்டு 27.10.2021 அந்தோணிராஜ், தான் பொது அதிகாரம் பெற்றவர் என்ற வகையில் ராஜி என்பவரின் மனைவி சங்கரிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு சங்கரி 7.2 2022 அன்று மதினா பேகம் என்பவருக்கு விற்றதாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்!
புகார் கொடுத்த தி.மு.க எம்.எல்.ஏக்கள்!

பூமிதேவியிடம் இருந்து பொது அதிகாரம் பெற்றவராக தன்னை காட்டிக் கொண்டவர் தற்போதைய புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் உப்பளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் மகள் பிரபாவதியின் கணவர்தான் அந்தோணிராஜ் என்பது தெரியவருகிறது. மேலும் அந்தோணி ராஜிடம் 27.10.22 அன்று கிரையம் பெற்ற சங்கரி என்பவர் அதே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் உடன்பிறந்த சகோதரர் ராஜியின் மனைவி ஆவார்.

எனவே கடந்த பத்து ஆண்டுகளாக இந்த இரு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நடைபெற்ற அனைத்து பத்திரப்பதிவு பரிவர்த்தனைகளையும், சொத்து விற்றது மற்றும் வாங்கியது குறித்த‌ அனைத்து விவரங்களையும் சிபிஐ ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத், உப்பளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் முதலியார்பேட்டை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் பதவியில் இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்து இருக்கிறார்கள்.

வேறு யாரேனும் இந்த இரண்டு எம்எல்ஏக்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், பத்திரப்பதிவில் ஒரு அரசு அதிகாரி கொல்லப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி, இதன் மீது உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகனின் தம்பி ராஜி, அவரது மனைவி சங்கரி ஆகியோர் பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்களின் சொத்துகளை அபகரித்து போலி பத்திரப்பதிவு செய்திருப்பதாக பகிரங்க தகவலை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories