இந்தியா

அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய ஜெகன்மோகன் உத்தரவு... ஆந்திராவில் நடப்பது என்ன?

ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய ஜெகன்மோகன் உத்தரவு... ஆந்திராவில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில், 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் ஜெகன்மோகன். அதன்படி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை பிரித்து புதிதாக 13 மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.

மேலும், முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியமைக்கும்போதே, “அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்படுவர். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால், அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலரும், தங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டரை ஆண்டுகளை தாண்டிய பிறகும், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படவில்லை.

இதனால் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஆந்திர மாநில அமைச்சர்கள் ராஜினாமா செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனை முதலமைச்சர் ஜெகன் மோகன் சந்தித்து பேச உள்ளதாகவும், புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆந்திர அரசின் புதிய அமைச்சரவை வரும் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories