இந்தியா

சொத்துக் குவிப்பு வழக்கு.. செப்.,15ம் தேதி தீர்ப்பு: முதல்வராக நீடிப்பாரா ஜெகன்மோகன் ரெட்டி?

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணை செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு.. செப்.,15ம் தேதி தீர்ப்பு: முதல்வராக நீடிப்பாரா ஜெகன்மோகன் ரெட்டி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி 2019ம் ஆண்டு பதவியேற்றார். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் முதல் குற்றவாளியாகவும், விஜய் சாய் ரெட்டி எம்.பி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இரு தரப்பு விவாதங்களும் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. மேலும் இவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.பி ரகுராம் கிருஷ்ணம்ம ராஜு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையும் நேற்று முன்தினம் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து இந்த இரு வழக்குகளும் வரும் செப்டம்பர் 15ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சி.பி.ஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக நீடிப்பதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. ஒருவேலை ஜெகன்மோகனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அடுத்து முதல்வரை யாரை நியமிப்பது என்பதிலும் கட்சிக்குள் விவாதாம் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் நேற்று முன்தினம் சூதாட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு வழக்குதான் ஆந்திரமாநிலத்தில் மக்கள் மத்தியில் பரபரப்பு பேச்சாக உள்ளது.

banner

Related Stories

Related Stories