இந்தியா

கேரளாவில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய மூதாட்டி.. CCTV மூலம் அம்பலம்!

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள் அழுதபடியே இருப்பதை பிபின் கவனித்திருக்கிறார். ஆனால் குழந்தைகள் ஏதும் தெரிவிக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டில் சிசிடிவி பொருத்தியிருக்கிறார்.

கேரளாவில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய மூதாட்டி.. CCTV மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பராமரிப்பு பணிக்காக நியமித்த மூதாட்டி ஒருவர் அவ்வீட்டில் இருந்த குழந்தைகளை அடித்து துன்புறுத்திய நிகழ்வு இடுக்கி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

கேரளாவின் இடுக்கியில் உள்ள உடும்பானூர் பகுதியைச் சேர்ந்தவர் பிபின். இவருக்கு 5 மற்றும் 4 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிபினின் மனைவி வெளிநாட்டில் உள்ளதால் அவரது குழந்தைகளையும் வீட்டையும் பராமரிப்பதற்காக மூலமட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கம்மா (60) என்ற பெண் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள் அழுதபடியே இருப்பதை பிபின் கவனித்திருக்கிறார். ஆனால் குழந்தைகள் ஏதும் தெரிவிக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டில் சிசிடிவி கேமிராவை பொருத்தியிருக்கிறார்.

அதன்படி கடந்த மார்ச் 30ம் தேதி வீட்டுக்கு வந்த போதும் பிபின் பெண் குழந்தை அழுதபடியே இருந்ததால் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்திருக்கிறார்.

அதில், குழந்தையை தங்கம்மா அடித்து துன்புறுத்தி அறையை விட்டு துரத்தியது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிபின் உடனடியாக தங்கம்மாவின் செயல் குறித்து போலிஸிடம் பிபின் புகாரளித்திருக்கிறார்.

ஒரு மாத ஒப்பந்தத்தின் படி வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாளே தங்கம்மா குழந்தைகளை கொடுமைப்படுத்தியது தெரிய வந்திருக்கிறது.

ஆனால் சமைப்பதற்காக உலையில் அரிசியை ஊற்றும் போது கொதிக்கும் நீர் தெளிக்காமல் இருக்கவே குழந்தையை வெளியே விட்டதாக தங்கம்மா கூறியிருக்கிறார்.

இருப்பினும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் குழந்தைகளை தாக்கிய தங்கம்மா தலைமறைவாகி முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories