இந்தியா

தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. : “அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின்” திறப்பு விழா இன்று!

டெல்லி - தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கழக அலுவலகமான “அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின்” திறப்பு விழா இன்று (ஏப்.2) மாலை நடைபெறுகிறது.

தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. : “அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின்” திறப்பு விழா  இன்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லி - தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் கழக அலுவலகமான “அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின்” திறப்பு விழா இன்று (ஏப்.2) மாலை நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் - கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இக்கண்கவர் கட்டிடத்தைத் திறந்து வைத்து, அதனை கழகத்துக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும் - இம்மாளிகையின் முன்னர் அமைக்கப் பெற்றுள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.

இவ்விழாவிற்கு கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமை வகிக்க, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் முன்னிலை வகிக்கிறார். புதுடெல்லி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப் போகும் இவ்விழாவில் - காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் அகில இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, விழாவிற்கு அணி சேர்க்கிறார்கள்!

‘உங்களில் ஒருவன்’உணர்ச்சிமிகு மடல்!

டெல்லி ‘அண்ணா - கலைஞர் அறிவாலயம்’ இன்று திறக்கப்படும் வேளையில்; இக்கவினுறு கட்டிடம் அமைந்ததன் செழுமிய வரலாற்றை நமது உயிரினுமினிய கழகத்தலைவர் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , கழகத்தின் போர்வாளும் கேடயமுமான ‘முரசொலி’யில் “தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை!”எனும் தலைப்பில், இரு தினங்களுக்கு முன்னர் உணர்ச்சிமிகு ‘உங்களில் ஒருவன்’ மடல் தீட்டியிருந்ததை அறிவோம்!

அதில் கழகத் தலைவர் அவர்கள்; கம்பீரமாகக் குறிப்பிடுவதை இவ்வேளையில் நினைவு கூர்வது; இச்செய்திக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் எனின், அது மிகையல்ல. கழகத் தலைவர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்,

இவ்வாறு :- “நாடாளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்ததன் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் 2013-ஆம் ஆண்டுடெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் நமது கழகத்திற்கு அலுவலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.

காலம் கனிந்த நிலையில், தற்போது அந்த இடத்தில் அறிவாலயம் கம்பீரமாக எழுந்துநிற்கிறது. அறிவாலயம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது, சென்னையில் உள்ள கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம்தான்.

உணர்வு கலந்து கலைஞர் உருவாக்கிய கொள்கை மாளிகை!

ஒரு கட்சி அலுவலகம் எப்படி அமையவேண்டும் என இந்திய அரசியல் கட்சிகளுக்கு இலக்கணமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தன் உணர்வைக் கலந்து உருவாக்கிய கொள்கை மாளிகைதான் அண்ணா அறிவாலயம். அறிவாலயம் என்பது வெறும் கட்டடமல்ல. இயக்கத்தின் கொள்கையும் உடன்பிறப்புகளின் உணர்வும் குழைத்து உருவாக்கப்பட்ட இலட்சிய மாளிகை!

அப்படிப்பட்ட ஒரு திராவிட மாளிகையாக டெல்லிப் பட்டணத்தில் “அண்ணா - கலைஞர் அறிவாலயம்” எழுந்து நிற்கிறது. உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் உருவான கட்டடங்கள் போலவே, 3 தளங்களைக் கொண்ட டெல்லி அறிவாலயமும் திராவிடக் கட்டட அமைப்பின்படி உருவாக்கப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணம் நிறைவேறுகிறது!

உயரமான நான்கு தூண்களைக் கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா - கலைஞர் இருவரது மார்பளவுச் சிலைகள், கழக நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நிர்வாகிகள் தங்குவதற்கான அறை என, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், “அண்ணா - கலைஞர் அறிவாலயம்” அழகுற அமைந்துள்ளது. பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் இன்று நம்மிடையே இல்லை.

பேராசிரியப் பெருந்தகை இல்லை. தலைவர்கலைஞரின் மனசாட்சியாக விளங்கியமுரசொலி மாறன் அவர்கள் இல்லை. எனினும், அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றும் வகையில், டெல்லிப் பட்டணத்தில் அறிவாலயம் அமைந்திருக்கிறது. தவிர்க்க முடியாத இடம் வகிக்கும் ‘திராவிட மாடல்!’

இந்திய ஒன்றிய அரசியலில் திராவிடமுன்னேற்றக் கழகமும், அதன் கொள்கைகளைச் செயல் வடிவமாக்கும் திராவிடமாடலும் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கின்றன. அதன் அழுத்தமான அடையாளம்தான்; டெல்லியில் திறக்கப்படும் அண்ணா - கலைஞர் அறிவாலயம். இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு, ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது.

உடன்பிறப்புகளாகிய உங்களைப் போலவே உங்களில் ஒருவனான நானும் உவகை அடைகிறேன்; பெருமை கொள்கிறேன்.”- என்று கழகத் தலைவர் அவர்கள்அம்மடலில் நெஞ்சம் நெகிழ்ந்து குறிப்பிட்டார்கள். அத்தகு பெருமைக்குரிய கட்டிடத்தின் திறப்பு விழா பற்றிய விபரம் வருமாறு :-

புதுடெல்லி - மிண்டோ சாலை, டிடியு மார்க், பிளாட் எண்.6 எனும் முகவரியில் அமைந்துள்ள, “அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின்” திறப்பு விழா இன்று (2.4.2022 - சனிக்கிழமை) மாலை 5.00 மணியளவில் நடைபெறுகிறது.

இவ்விழாவிற்கு - கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள் தலைமை வகிக்கிறார். கழகப் பொருளாளரும் - தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுஅவர்கள் முன்னிலை வகிக்கிறார். இவ்விழாவில் - கழகத் தலைவரும், தமிழக முதல்வரும், இக்கட்டிடம் அமைவதற்கு முழு முதற்காரணமுமான மு.க.ஸ்டாலின் அவர்கள், “அண்ணா - கலைஞர் அறிவாலயம்” கழக அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார்.

மேலும், ‘அண்ணா - கலைஞர்’ அறிவாலயத்தின் முன்னர் அமைக்கப் பெற்றுள்ள பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளையும் அவர் திறந்து வைக்கிறார்.

தலைமைக் கழகம் விடுத்த அன்பழைப்பு!

இவ்விழாவிற்கு - கண்கவரும் வண்ணம் அழைப்பிதழைத் தயாரித்துள்ள தி.மு.க. தலைமைக் கழகம், அவ்வழைப்பிதழில், “பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு - தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அரை நூற்றாண்டுக் காலம் வளர்த்தெடுக்கப்பட்டதே தனிப்பெரும் இயக்கமாம் திராவிடமுன்னேற்றக் கழகம்.

இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவதுபெரிய அரசியல் கட்சியாக அங்கீகாரம்பெற்றுத் தந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைநகர் டெல்லியில் கழகத்துக்கென புதிய அலுவலகம் ஒன்றை உருவாக்கித்தந்துள்ளார்கள்.

“அண்ணா - கலைஞர் அறிவாலயம்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இதன் திறப்புவிழா 2.4.2022 - சனிக்கிழமைமாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் பங்கெடுத்துச் சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்” - என, அழைப்பு விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories