இந்தியா

”இதுக்கு எல்லாமா ஹேக் செய்வது”.. வாலிபரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்!

தொலைந்த சூட்கேஸ் பையை கண்டுபிடிப்பதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் வலைதளத்தை வாலிபர் ஹேக் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”இதுக்கு எல்லாமா ஹேக் செய்வது”.. வாலிபரின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த இண்டிகோ ஏர்லைன்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்திலிருந்து நந்தகுமார் என்ற வாலிபர் இண்டிகோ விமானம் மூலம் மும்பைக்கு பயணித்துள்ளார். பிறகு மும்பை விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தனது சூட்கேஸ் மாற்றி வழங்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இண்டிகோ சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். மேலும் சூட்கேஸ் மாற்றி எடுத்துச் சென்ற சக பயணி குறித்த விவரங்களை தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

ஆனால், பயணியின் விவரங்களைத் தெரிவிக்க முடியாது என நிர்வாக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை முயற்சி செய்தும் அந்த பயணி குறித்த தகவல் கிடைக்காததால் ஆத்திரமடைந்த நந்தகுமார் இண்டிகோ நிறுவனத்தின் வலைதளத்தை ஹேக் செய்துள்ளார்.

பின்னர் அந்த பயணியின் முகவரியை கண்டுபிடித்து இருவரும் தங்களது சூட்கேஸ் பையை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நந்தகுமார் தனது ட்வீட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

மேலும் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை மேம்படுத்த வேண்டும் எனவும் தனது கோரிக்கையை விடுத்துள்ளார். சூட்கேஸ் பை மாறியதற்காக இளைஞர் ஒருவர் விமான நிலையத்தின் வலைதளத்தை ஹேக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories