இந்தியா

கணவர் என நினைத்து INSTAGRAM-ல் மர்ம நபருடன் பழகி வந்த பெண்.. நிர்வாண படங்களை அனுப்பியதால் அதிர்ச்சி!

இன்ஸ்டாகிராமில் மூன்று மாதங்களாக கணவன் என நினைத்து மனைவி தவறாக சாட் செய்து பழகிவந்துள்ளார்.

கணவர் என நினைத்து INSTAGRAM-ல் மர்ம நபருடன் பழகி வந்த பெண்.. நிர்வாண படங்களை அனுப்பியதால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தீன்தோஷி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணவர் என நினைத்து மர்ம நபர் ஒருவருடன் மூன்று மாதம் பேசி பழகிவந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாணப்படங்களையும் அவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதைப்பார்த்த மர்ம நபர் உற்சாகத்தில் தினமும் அந்தரங்க படங்களை அனுப்பும் படி கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் தனது கணவரிடம் ஏன் என்னை இப்படி மிரட்டுகிறீர்கள் என சண்டைபோட்டுள்ளார்.

அப்போதுதான் அவருக்கு மூன்று மாதங்களாக கணவர் என நினைத்து மர்ம நபருடன் பேசி, பழகிவந்தது தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை செய்தபோது அந்தப் பெண் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் வாலிபர் ஒருவருடன்தான் அவரது கணவர் பெயரில் போலியாக கணக்கு துவங்கிப் பழகி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories