இந்தியா

பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: மக்கள் மீது சுமை ஏற்றும் மோடி அரசு!

பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: மக்கள் மீது சுமை ஏற்றும் மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், அத்தியாவசிய மருந்துகளில் விலையும் அடுத்த மாதத்திலிருந்து உயரவுள்ளது என்ற அறிவிப்பு மற்றொரு இடியாக விழுந்துள்ளது.

சமீபத்தில் இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராசிட்டமால் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் மாதம் முதல் 10.7% உயர உள்ளதாக அறிவித்துள்ளது.

இதனால் காய்ச்சல், தலைவலி, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் உயரக்கூடும். மருந்துகளின் விலை உயர்வு ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories