இந்தியா

“சிரித்துக்கொண்டே சொன்னால் வன்முறைக் கருத்து அல்ல.. அது குற்றமும் அல்ல”: உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது.

“சிரித்துக்கொண்டே சொன்னால் வன்முறைக் கருத்து அல்ல.. அது குற்றமும் அல்ல”: உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

டெல்லியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற சமயத்தில் பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு அழைப்பு விடுத்த நிலையில், இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே டெல்லியில் கடும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக வெறுப்புக் கருத்துகளை விதைத்த ஒன்றிய பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க எம்.பி பிரவேஷ் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரிய முந்தைய மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின்போது ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ஜ.க எம்.பியுமான பிரவேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுக்களில் வகுப்புவாத கருத்து என்ன இருக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், “நீங்கள் புன்னகையுடன் எதையாவது சொன்னால் குற்றமில்லை, புண்படுத்தும் வகையில் ஏதாவது சொன்னால், குற்றமாகும்” என்று நீதிபதி சந்திர தாரி சிங் கூறினார்.

பிருந்தா காரத் மற்றும் டெல்லி போலிஸ் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.

பா.ஜ.க அமைச்சரின் வன்முறையைத் தூண்டும் பேச்சு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories