இந்தியா

மசாஜ் செய்யும் பேரில் வெளிநாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த கயவன் - ஜெய்ப்பூரில் நடந்த பயங்கரம்!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மசாஜ் செய்யும் பேரில் பாலியல் பலாத்காரம் செய்த கயவனை ஜெய்ப்பூர் போலிசார் கைது செய்துள்ளனர்.

மசாஜ் செய்யும் பேரில் வெளிநாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த கயவன் - ஜெய்ப்பூரில் நடந்த பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வந்த பெண்ணை கற்பழித்த அந்த நபர் ஜெய்ப்பூரில் இருந்து தப்பியோட முயன்ற போது கடந்த புதன் கிழமையன்று வித்யாந்தர் நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருகார்.

30 வயது கொண்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண். சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

சிந்தி கேம்ப் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த பலரும் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். கடந்த புதன் கிழமை அன்று பாதிக்கப்பட்ட அந்த பெண், ஆயுர்வேத மசாஜ் செய்வதற்காக ஒரு நபரை போன் மூலம் அழைத்திருக்கிறார்.

மசாஜ் செய்ய வந்த அந்த நபர் வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதோடு பாலியல் ரீதியில் பலாத்காரமும் செய்திருக்கிறார். இதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மசாஜ் செய்ய வந்த நபர் ஓட்டம் பிடித்திருக்கிறார்.

இதனையடுத்து அப்பகுதி போலிஸாரிடம் அந்த பெண் புகார் கொடுத்திருக்கிறார். மேலும் அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சுற்றுலாவுக்கு வந்த வெளிநாட்டு பெண்ணை பலவந்தப்படுத்திய நபரை பிடிக்கும் வேலையில் போலிஸார் ஈடுபட்டனர்.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த பிஜு முரளிதரன் என்பதும், கேரளாவுக்கு தப்ப முயற்சித்ததும் தெரிய வந்திருக்கிறது. இன்னர் அந்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார் பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories