இந்தியா

அழகிய முகம், மீசை இருந்ததற்காக தலித் இளைஞர் குத்தி கொலை?: ராஜஸ்தானில் கொடூர சம்பவம்!

தலித் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிய முகம், மீசை இருந்ததற்காக தலித் இளைஞர் குத்தி கொலை?: ராஜஸ்தானில் கொடூர சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநிலத்திற்குட்பட்ட பர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரபால் மேக்வால். இவர் சுகாதார உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜிதேந்திரபால், தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக மற்றொரு வாகனத்தில் வந்த 2 பேர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் திடீரென கத்தியை எடுத்து ஜிதேந்திரபால் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் ஜிதேந்திரபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இந்த கொலையில் தொடர்புடைய சூரஜ் சிங், ரமேஷ் சிங் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

மேலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜிதேந்திரபால், மீசை வைப்பது குறித்தும் தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்துள்ளார். இதைப்பார்த்து வெறுப்படைந்த இவர்கள் அவரை குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதை போலிஸார் மறுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories