இந்தியா

“உடனே இந்த சோதனையை தொடங்குங்க..” : மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் அவசர உத்தரவு என்ன?

இன்ஃப்ளுயன்ஸா சோதனையை மீண்டும் தொடங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

“உடனே இந்த சோதனையை தொடங்குங்க..” : மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் அவசர உத்தரவு என்ன?
Drew Angerer
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வந்ததையடுத்து மீண்டும் சீனா, தென் கொரியா நாடுகளில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறிவருகிறார்கள். இந்தியாவிலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா தொற்றின் 4வது அலை ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்ஃப்ளூயன்சா, sari போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தொற்றுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கான சோதனைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சுவாசத் தொற்றுகளோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளிடம் சோதனை செய்யப்படும்போது புதிய கொரோனா தொற்றுகளைக் கண்டறிய முடியும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போட தகுதியுடையவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories