இந்தியா

"இனி PhD படிக்க முதுநிலை கல்வி தேவையில்லை" - UGCயின் புதிய மாற்றம்!

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக பி.எச்டி படிப்பில் சேரும் புதிய திட்டத்தை UGC விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

"இனி PhD படிக்க முதுநிலை கல்வி தேவையில்லை" - UGCயின் புதிய மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முதுநிலை கல்வி படிக்காமல் இளநிலை பட்டப்படிப்பு முடிந்ததும் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் புதிய இளநிலை படிப்புகளை UGC அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

பி.எச்டி எனப்படும் ஆராய்ச்சி படிப்புகளை படிக்க இனிமேல் முதுநிலை பட்டம் இல்லாமல் 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் முடித்த உடன் பி.எச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உயர்கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது முதுநிலை படிப்பை மேற்கொள்ளாமல் நேரடியாக பி.எச்டி படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்துகிறது.

இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில், 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட உள்ளன.

யுஜிசி-யின் இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டு இளநிலை படிப்பை படித்தால் முதுநிலை படிக்காமல் நேரடியாக பி.எச்டி சேரலாம்.

இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூர கல்வி மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம்.

புதிய படிப்பில் சேருவோர் எப்போது விரும்பினாலும் பாதியில் நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர் கல்வி நிலையத்திலும் படிப்பை தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories