இந்தியா

ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபர்.. நொடிப்பொழுதில் உயிரைக் காப்பாற்றிய RPF வீரர்: திக் திக் வீடியோ!

ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய ஆர்.பி.எப் வீரருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஓடும் ரயிலில் தவறி விழுந்த நபர்.. நொடிப்பொழுதில் உயிரைக் காப்பாற்றிய RPF வீரர்: திக் திக் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பை வடாலா ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர் வேகமாக ஓடிவந்து, ரயிலில் ஏறியபோது தடுமாறி நடைமேடையில் விழுந்தார்.

இதைப்பார்த்த அங்கிருந்து ஆர்.பி.எப் வீரர் சற்று நொடியும் தாமதிக்காமல் அவரை இழுத்து உயிரைக் காப்பாற்றினார். மேலும் ஓடும் ரயில் ஏறக்கூடாது என அறிவுரையும் வழங்கினார். சற்று தாமதித்திருந்தாலும் ஓடும் ரயிலில் சிக்கி அவர் உயிரிழந்திருக்கக் கூடும்.

இந்த சம்பவம் ரயில் நிலையத்திலிருந்து சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை வெளியிட்டு ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

அதில்,‘வடாலா ரெயில் நிலையத்தில் ஓடும் உள்ளூர் ரயிலில் ஏறும் போது தவறி கீழே விழுந்த ஒரு பயணியின் உயிரை ஆர்பிஎப் கான்ஸ்டபிள் நேத்ரபால் சிங் சரியான நேரத்தில் காப்பாற்றினார். பயணிகள் ஓடும் ரெயிலில் ஏற வேண்டாம், இறங்க வேண்டாம்’ என ரெயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories