இந்தியா

தாகமா இருக்கு.. பரிதாபமாக பேசி கத்தி முனையில் கொள்ளை;10 லட்ச நகை, பணத்தை ஆட்டையப்போட்ட போலி டெலிவரி பாய்

தானேவில் உள்ள பஞ்ச்பகாடி பகுதியைச் சேர்ந்த பெண்ணின் (39) வீட்டில்தான் இந்த துணிகர செயலை கொள்ளையன் நடத்தியிருப்பதாக புகாரின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

தாகமா இருக்கு.. பரிதாபமாக பேசி கத்தி முனையில் கொள்ளை;10 லட்ச நகை, பணத்தை ஆட்டையப்போட்ட போலி டெலிவரி பாய்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உணவு டெலிவரி பணியாளர் போல உடை அணிந்து கத்தி முனையில் பெண்னை மிரட்டி 10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இளைஞருக்கு தானே போலிஸார் வலைவீசியுள்ளனர்.

நெளபடா போலிஸும், தானே குற்றப்பிரிவு போலிஸாரும் இணைந்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். தானேவில் உள்ள பஞ்ச்பகாடி பகுதியைச் சேர்ந்த பெண்ணின் (39) வீட்டில்தான் இந்த துணிகர செயலை கொள்ளையன் நடத்தியிருப்பதாக புகாரின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

பஞ்ச்பகாடியில் கட்டுமான தொழில் செய்யும் தனது கணவர் மற்றும் 15 வயதுடைய மகனுடம் வசித்து வருகிறார் புகார்தாரரான பெண். கடந்த மார்ச் 9ம் தேதியன்று நண்பகல் 12.45 மணியளவில் பெண்ணும், அவரது மகனும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, ஸ்விக்கி டெலிவரி சீருடை அணிந்து வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறார். அப்போது நாங்கள் எதுவும் உணவு ஆர்டர் செய்யவில்லையே என பெண்மணி தெரிவிக்க அதற்கு அந்த இளைஞன் தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்.

அதனால் உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வரும் வேளையில், வீட்டினுள் நுழைந்த அந்த போலி டெலிவரி பாய் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து வீட்டில் இருந்த 15 வயது சிறுவனின் கழுத்தில் வைத்து மிரட்டியிருக்கிறார்.

மேலும் வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தை கொண்டு வரச்சொல்லியிருக்கிறார். மகனை காப்பாற்றும் நோக்கில் அந்த பெண் நகை, பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார். இதனையடுத்து 10.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகை, பணம் மற்றும் ஒரு மொபைல் ஃபோனையும் எடுத்துக்கொண்டு பறந்திருக்கிறார்.

இதனையடுத்து நெளபடா போலிஸிடம் பெண் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தானே குற்றப்பிரிவு போலிஸார் உதவியுடன் கொள்ளையனை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories