இந்தியா

10 அமைச்சர்கள் படுதோல்வி.. 47 இடங்களை இழந்த பா.ஜ.க : உத்தர பிரதேச தேர்தலில் செல்வாக்கை இழந்த யோகி!

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்திருந்தாலும் 10 அமைச்சர்கள் படுதோல்வியடைந்திருப்பது யோகிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

10 அமைச்சர்கள் படுதோல்வி.. 47 இடங்களை இழந்த பா.ஜ.க : உத்தர பிரதேச தேர்தலில் செல்வாக்கை இழந்த யோகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதில், 273 தொகுதிகளை வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட வாக்கு சதவீதம் கடுமையாக சரித்துள்ளது.

மேலும், 2017ஆம் தேர்தலில் 47 இடங்களை மட்டுமே பெற்ற அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் 125 இடங்களைப் பெற்று தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ளது. கூடுதலாக 78 இடங்களை வென்று பா.ஜ.கவுக்கு தற்போது சவாலாக உருவெடுத்துள்ளார் அகிலேஷ் யாதவ்.

இதேபோல் யோகி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 10 அமைச்சர்கள் படுதோல்வியடைந்துள்ளனர். இது பா.ஜ.கவிற்கு பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத்தின் வலதுகையாக இருந்த துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌர்யா தோல்வியடைந்துள்ளார்.

மேலும், கரும்புத் துறை அமைச்சர் சுரேஷ் ராணா, வருவாய் துறை இணையமைச்சர் சத்ரபால் சிங் கங்வார், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், பொதுப்பணித்துறை இணையமைச்சர் சந்திரிகா பிரசாத் உபாத்யாயா, ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, விளையாட்டுத்துறை இணையமைச்சர் உபேந்திர திவாரி, ஆரம்பக் கல்வி துணை இணையமைச்சர் சதீஷ் சுந்திர துவிவேதி, ரண்வீர், சிங், லக்கான் சிங் ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், கடந்த தேர்தலைக் காட்டிலும் இதில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது உத்தர பிரதேச மக்கள் பா.ஜ.க ஆட்சியை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories