இந்தியா

“இனி பட்டன் போன்கள் மூலமாகவும் பணம் அனுப்பலாம்” : புதிய வசதியை அறிமுகப்படுத்திய RBI

சாதாரண கைபேசிகளிலும் UPI பயன்படுத்தும் வகையில் #123Pay என்ற புதிய யுபிஐ வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

“இனி பட்டன் போன்கள் மூலமாகவும் பணம் அனுப்பலாம்” : புதிய வசதியை அறிமுகப்படுத்திய RBI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி, சாதாரண பட்டன் போன்களுக்கான புதிய யுபிஐ வசதியை அறிமுகப்படுத்திள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறுகையில், “Feature Phone எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள். இந்த யுபிஐ வசதிக்கு “123PAY” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை பெற “DIGISAATHI” என்ற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும்.

குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் உதவும். இந்த “123PAY” திட்டத்தின் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கியமான இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடைய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையில் சாதாரண மொபைலில், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு டயல் செய்வதன் மூலம் பரிவர்த்தனை வகையை தேர்வு செய்து, UPI பின்னை உள்ளீடு செய்வதன் மூலம் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories