இந்தியா

”புருஷன் குணமாகனும்னா இந்த சடங்குலாம் செய்யணும்” - பெண்ணை மயக்கி வன்கொடுமை செய்த ஜோசியர்கள் கைது!

கணவரை குணப்படுத்துவதாகச் சொல்லி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொல்கத்தா ஜோதிடர்கள் இருவர் கைது.

”புருஷன் குணமாகனும்னா இந்த சடங்குலாம் செய்யணும்” - பெண்ணை மயக்கி வன்கொடுமை செய்த ஜோசியர்கள் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜோதிடர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கொல்கத்தா போலிஸார் இருவரை செய்திருக்கிறார்கள்.

பெண்ணின் புகாரில், தன்னுடைய கணவரை குணப்படுத்துவதற்கு இரு வெவ்வேறு இடங்களில் சடங்குகள் செய்ய வேண்டும் எனக் கூறியதால் நம்பி சென்றேன்.

மேலும் பிர்பும், புர்த்வான், டையமண்ட் ஹார்பர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று சடங்குகள் செய்ததாகவும், அந்த சமயங்களில் தனக்கு அந்த ஜோதிடர்கள் சடங்கு செய்த தண்ணீர் எனக் கூறி பாணத்தை கொடுத்ததால் சுயநினைவற்று போனேன். அதன் பிறகுதான் தன்னை இரு முறை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது அறிய வந்தது எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அபிஜித் கோஷ் என்ற ஜோதிஷ் சுபாஷ் மற்றும் ஜோதிஷ் சுபாஷிஸ் ஆகிய இருவர் அடையாளம் காணப்பட்டு சித்புர் போலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பேசியுள்ள சித்புர் போலிஸார், மூன்றாவது முறையாக சடங்குகள் மேற்கொள்வதற்காக அந்த பெண்ணை அழைத்துச் சென்றபோது ஜோதிடர்களை கைது செய்ததாகவும், கணவரையும், குடும்பத்தினரையும் காப்பதாகச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து கைதான ஜோதிடர்கள் மீது ஏற்கெனவே புகார்கள் இருக்கிறதா என்றும் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோக, அந்த ஜோதிடர்கள் கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்புதான் இந்த ஜோதிட, தாந்திரீக தொழிலுக்கே வந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories