இந்தியா

Tattoo வரைய வந்த பெண்களிடம் அத்துமீறிய கலைஞர்... அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததால் அதிர்ச்சி!

கேரளாவில் tattoo வரைய வந்த பெண்ணிடம், வாலிபர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tattoo வரைய வந்த பெண்களிடம் அத்துமீறிய கலைஞர்...  அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த பிரபல டாட்டூ கலைஞர் ஒருவர் பார்லர் நடத்தி வருகிறார். இங்கு நடிகைகள் முதல் மாடல் அழகிகள் வரை பலரும் டாட்டூ குத்திக் கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சமீபத்தில் டாட்டூ குத்திய பெண்களிடம், டாட்டூ கலைஞர் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் முதலில், டாட்டூக் குத்தும்போது அந்த நபர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலானதை அடுத்து டாட்டூ கலைஞரால் பாதிக்கப்பட்ட பலரும் அவர் மீது புகார்கள் கூறி வருகிறார்கள்.

அடுத்தடுத்து பெண்கள் பலர் பிரபலமான டாட்டூ கலைஞர் மீது பாலியல் புகார் கூறி வருவது கேரளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக இளைஞர்கள் மத்தியில் டாட்டூ குத்திக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரபல டாட்டூ கலைஞர் ஒருவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories