இந்தியா

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள்; அலறியடித்து ஓடிய வியாபாரி

தூங்கி கொண்டு இருந்த வியாபாரியின் சட்டை பையில் இருந்து, செல்போனை மர்ம கும்பல் திருடி செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போனை திருடிச் சென்ற இளைஞர்கள்; அலறியடித்து ஓடிய வியாபாரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரி நகர பகுதியான மிஷின் வீதியில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் பகுதியாகும்.

இந்நிலையில் தனது வியாபாரத்தை முடித்து விட்டு, அசதியில் பொம்மை வியாபாரி ஒருவர் தனது கடை அருகே தூங்கி கொண்டு இருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரை சுற்றி வந்து சட்டை பையில் இருந்த செல்போனை திருடி சென்றிருக்கிறார்கள். இதனை அடுத்து கண்விழித்து பார்த்த அந்த பொம்மை வியாபாரி அந்த கும்பலை நோக்கி ஓடினார். அதற்குள் அந்த திருட்டுக் கும்பல் தப்பியோடியிருக்கிறது.

செல்போனை பறிகொடுத்த பொம்மை வியாபாரி, இது தொடர்பாக பெரியகடை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் தூங்கிக் கொண்டிருந்த வியாபாரியிடம் இருந்து செல்போனை, எடுத்து செல்வது தெரிய வந்தது. தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories