இந்தியா

”என்னை சாகடிச்சது இவங்கதான்” - பாலியல் துன்புறுத்தலால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; ஹரியானாவில் பகீர்!

தனது மரணத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு ஹரியானாவில் 10 வகுப்பு படிக்கும் மாணவன் அடுக்குமாடி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டிருக்கின்றான்.

”என்னை சாகடிச்சது இவங்கதான்” - பாலியல் துன்புறுத்தலால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; ஹரியானாவில் பகீர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஃபரீதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்து வந்திருக்கிறான் 15 வயது சிறுவன். மாணவனின் தாயாரும் அதேப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த வியாழனன்று இரவு 9.15 மணியளவில் மாணவன் தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்திருக்கிறான்.

அப்போது தனது கணவரை சந்திக்கச் சென்றிருந்த மாணவனின் தாயாருக்கும், போலிஸாருக்கும் அண்டை வீட்டார் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து போலிஸார் வந்து மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு அச்சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே மாணவனின் வீட்டை சோதித்ததில் தற்கொலை கடிதம் இருந்தது.

அதனைக் கைப்பற்றிய போலிஸார் அதில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவன் அவன் படித்த பள்ளி நிர்வாகத்தையும், நிர்வாகிகளையும், மாணவர்களை பற்றியும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

மேலும், “நீங்கள் தைரியமான, அற்புதமான, சிறந்த தாயார். உங்களை போன்று என்னால் தைரியமாக இருக்க முடியவில்லை. இந்த பள்ளி என்னைக் கொன்றுவிட்டது. பள்ளியில் மாணவர்கள் சிலர் என்னை பாலியல் ரீதியாகவும், மனதளவிலும் தொந்தரவு செய்தார்கள்.

என்னால் முடிந்தவரை வாழ முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. உறவினர்கள் எதும் கூறினால் கண்டுக்கொள்ள வேண்டாம். நீங்கள் தேவதை. நான் பலவீனமாகிவிட்டேன். என்ன மன்னித்துவிடுங்கள்” என மரணித்த அந்த சிறுவனின் தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஃபரீதாபாத் போலிஸார் விசாரணையை தொடங்கினர். மேலும் உயிரிழந்த மாணவனின் தாயாரும் பள்ளி நிர்வாகம் மீது புகார் தெரிவித்திருந்தார்.

அதில், டெல்லி பப்ளிக் ஸ்கூலில் தனது மகனை சக மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தது தொடர்பாக கடந்த ஆண்டே பள்ளி நிர்வாகத்திடம் வாய்மொழியாக புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மெயிலிலும் புகார் தெரிவித்தேன்.

மேலும், மனதளவிலும் மிகவும் வேதனை அடைந்த என் மகன் மனநல சிகிச்சையும் எடுத்துவந்தான். இதன் காரணமாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் படிப்பதற்கு உதவி கோரியிருந்த போது, மகனை திட்டியிருக்கிறார். இதனால் என் மகன் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.” எனக் கூறியிருக்கிறார்.

இந்த புகாரின் மீது பள்ளி நிர்வாகத்திடம் போலிஸார் விசாரித்த போது அவர்கள் புகாருக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். எனவே விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    banner

    Related Stories

    Related Stories