இந்தியா

52 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி : இந்தியாவில் இத்தனை பேரா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் 52 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

52 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி : இந்தியாவில் இத்தனை பேரா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த கொடூர தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தாலும் இன்றும் கொரோனாவில் இருந்து நம்மால் முழுமையாக விடுதலை பெற முடியவில்லை.

இந்த உயிர்க்கொல்லி கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 மாதங்களில் மட்டும் உலகம் முழுவதும் 52 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோர்களைக் இழந்தை குழந்தைகள் குறித்து உலகம் முழுவதும் 20 நாடுகளில் The Lancet ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில்தான் 52 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டும் 19.17 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர். அதேபோல் பெரு, தென்னாப்பிரிக்கா நாடுகளில் பாதிக்கப்பட்டோர் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதுபோல், தாத்தா, பாட்டிகளுடன் வளர்ந்து வந்த18.33 லட்சம் குழந்தைகளும் அவர்களை இழந்து ஆதரவற்று போயிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் மே 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை கடந்த ஆறு மாதத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு முடிகளை பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

banner

Related Stories

Related Stories