இந்தியா

”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!

ராணுவத்தில் ஆள் சேர்ப்பதையாவது தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உத்தரபிரதேச இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.

”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் கோண்டா என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது நாட்டில் வேலைவாய்பில்லை. ராணுவத்தில் மூன்று ஆண்டுகளாக ஆள் சேர்ப்பு இல்லை என்று இளைஞர்கள் கோஷமிட்டனர்.

”ராணுவத்துலயாச்சும் வேலைக்கு ஆட்களை எடுங்க” - ராஜ்நாத் சிங் பிரசாரத்தில் கோஷமிட்ட உ.பி. இளைஞர்கள்!

மேலும் எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள் எனவும் கோஷமிட்டனர். இதனால் ராஜ்நாத் சிங் தனது பேச்சை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

கொரோனா காரணமாக ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை என்று கூறிய ராஜ்நாத் சிங் விரைவில் மீண்டும் ஆள் சேர்ப்பு தொடங்கப்படும் என்று கோஷமிட்டவர்களை சமாதானம் செய்தார். அதன் பின்னரே இளைஞர்கள் அமைதியாகினர். இதனால் சில நிமிடங்கள் பிரசாரம் தடைபட்டது.

இதனிடையே நாளை (பிப்ரவரி 20) உத்தர பிரதேசத்தில் 3ம் கட்ட வாக்குப்பதிவு 16 மாவட்டங்களில் 59 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories