இந்தியா

பெற்றோர்களே உஷார்.. சாக்லேட் ஆசைக் காட்டி 3 வயது சிறுமியிடம் சில்மிஷம்; போபாலில் சிக்கிய 59 வயது காமுகன்!

மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக போபாலைச் சேர்ந்த 59 வயது முதியவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பெற்றோர்களே உஷார்.. சாக்லேட் ஆசைக் காட்டி 3 வயது சிறுமியிடம் சில்மிஷம்; போபாலில் சிக்கிய 59 வயது காமுகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தின் அசோகா கார்டன் பகுதியில் நேற்று முதியவர் ஒருவர் 3 வயது கொண்ட குழந்தையிடம் பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்யும் போது அவ்வழியேச் சென்ற பெண்கள் இருவர் அதனை கண்டிருக்கிறார்கள்.

அப்போது அந்த முதியவரிடம் இருந்த அக்குழந்தை அலறியபடி கத்தியிருக்கிறாள். இதனை காயத்ரி பாஸ்கர் என்ற பெண் பார்த்துள்ளார். அவர் குழந்தையிடம் பாலியல் தொந்தரவுதான் செய்கிறார் என்பதை உணர்ந்த அவர் தன்னுடன் வந்த தோழி விஜயா பாடீலுடன் சேர்ந்து அசோகா கார்டன் போலிஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் குழந்தையை மீட்டு, அந்த முதியவரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

விசாரணையின் போது, பெண் குழந்தையின் அண்டை வீட்டார்தான் அந்த முதியவர் என்றும், குழந்தையிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகச் சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவு செய்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பும் இதேப்போன்ற செய்கையில் அந்த முதியவர் ஈடுபட்டதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தகவல் கொடுத்த பெண்கள் இருவரையும் போலிஸார் பாராட்டியிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories