இந்தியா

சிகரெட்டை பிடுங்கி வீசியதால் ஆத்திரம்; பெண்ணின் மூக்கை உடைத்த வங்கி ஊழியர் - குருகிராமில் பயங்கரம்!

ஷேர் ஆட்டோவில் புகைப்பிடித்ததால் கண்டித்த பெண்ணின் மூக்கில் குத்திய வங்கி அதிகாரியை குருகிராம் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சிகரெட்டை பிடுங்கி வீசியதால் ஆத்திரம்;  பெண்ணின் மூக்கை உடைத்த வங்கி ஊழியர் - குருகிராமில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி NCRல் உள்ள ஃபரிதாபாத்தில் பகுதியில் வசித்து வருபவர் வாசு சிங் என்ற வங்கி ஊழியர். ஷேர் ஆட்டோவில் வந்த இவர், புகைப்பிடித்ததற்காக கண்டித்த பெண்ணை தாக்கிய புகாரில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

குருகிராம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றுபவர் லதா என்ற பெண்மணி. கடந்த திங்களன்று பணி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் லதா.

அப்போது, க்ரீன்வுட் சிட்டி அருகே தம்பதியர் ஒருவர் லதா வந்த ஷேர் ஆட்டோவில் ஏறியிருக்கிறார்கள். அப்போது, அந்த நபர் ஷேர் ஆட்டோவில் பயணித்தபடியே புகைப்பிடித்திருக்கிறார்.

சிகரெட்டை பிடுங்கி வீசியதால் ஆத்திரம்;  பெண்ணின் மூக்கை உடைத்த வங்கி ஊழியர் - குருகிராமில் பயங்கரம்!

இதனைக் கண்ட லதா அவரைக் கண்டித்திருக்கிறார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து புகைப்பிடித்தபடி இருந்ததால் அதனை பிடுங்கி லதா வீசியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வாசு சிங் லதாவின் மூக்கில் குத்தி ரத்தக்காயம் ஏற்படுத்தியிருக்கிறார்.

மேலும் லதாவை பொதுவெளியில் வைத்து தரைக்குறைவாக தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார். இதனையடுத்து ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர் போலிஸுக்கு புகார் கொடுத்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் வாசு சிங்கை கைது செய்து, 323 (தாக்குவது), 325 (வேண்டுமென்றே கடுமையாகத் தாக்குவது), 509 (பெண்களை அவமானப்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பதாக வாசு சிங் கூறியதால் அவரை காவல்துறை பிணையில் விடுவித்ததாக உதவி காவல் ஆய்வாளர் அமித் குமார் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories