இந்தியா

காவித்துண்டு கும்பலுக்கு ஒத்த ஆளாக பதிலடி கொடுத்த இஸ்லாமிய பெண்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

கல்லூரிக்கு வந்த இஸ்லாமியப் பெண்ணை சூழ்ந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவித்துண்டு கும்பலுக்கு ஒத்த ஆளாக பதிலடி கொடுத்த இஸ்லாமிய பெண்: வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலம் குண்டப்பூரில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், இந்துத்வா கும்பல்களின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்து இஸ்லாமிய பெண்களின் உடைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கல்லூரி வாளகத்திற்குள் மதமோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு கல்லூரிகளிலும் சில மாணவர்கள் காவித்துண்டு போட்டுக் கொண்டு ஹிஜாப் உடைக்கு எதிராக வன்முறைகளை தூண்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவரை அங்கிருந்த காவித்துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் தனி ஒருவராக நின்று காவித்துண்டு கும்பலுக்கு எதிராக 'அல்லாஹு அக்பர்' என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பிக் கொண்டே வகுப்பறையை நோக்கிச் சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து தனி ஒரு பெண்ணாக இருந்து காவித்துண்டு கும்பலை எதிர்கொண்ட அந்த மாணவிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories