இந்தியா

“இதுதான் ரூல்ஸ்.. பிடிக்காதவங்க கிளம்புங்க” : ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

சீருடை விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளுங்கள் என கர்நாடக மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“இதுதான் ரூல்ஸ்.. பிடிக்காதவங்க கிளம்புங்க” : ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் பா.ஜ.க ஆட்சியில் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் குறிப்பிட்ட சாதிய - இன மக்கள் மீது நடக்கும் தாக்குதலும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் மதமோதல்களை உண்டாக்க நினைக்கும் இந்துத்வா கும்பல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களை திட்டமிட்டே வளர்ப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில், சிறுபான்மையின பெண்களுக்கு எதிரான உடை விவகாரங்களை இந்துத்வா கும்பல் கையில் எடுத்து மோதல்களை உண்டாக்கும் வேலையைச் செய்து வருகிறது.

கடந்த மாதம் அங்குள்ள மசூதிகளில் ஏறி, காவிக் கொடி ஏற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கிய நிலையில், பள்ளி - கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது எனத் தெரிவித்து இந்துத்வா கும்பல் எதிர்ப்பை பதிவு செய்தது.

“இதுதான் ரூல்ஸ்.. பிடிக்காதவங்க கிளம்புங்க” : ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் கர்நாடக மாநிலம் குண்டப்பூரில் அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்துவர தடைவிதிக்கப்பட்டது. அதனை மீறி வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வாசலில் தடுத்து நிறுத்தியால், அம்மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளையில், இந்துத்வா கும்பல்களின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் கல்லூரிக்கு காவித்துண்டு அணிந்து வந்தனர். இதனால் கல்லூரி நிர்வாகம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஆடைகளை மாணவர்கள் அணிந்துவரக்கூடாது என்று அறிவித்தது.

இதுதொடர்பாக மாணவிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரலாம் ஆனால், அவர்கள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்பட்டுவார்கள் என்றும் கூறியது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இதுகுறித்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரனை நடைபெறவுள்ளது.

“இதுதான் ரூல்ஸ்.. பிடிக்காதவங்க கிளம்புங்க” : ‘ஹிஜாப்’ விவகாரத்தில் கர்நாடக அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

இந்நிலையில், அம்மாநிலக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், “ராணுவத்தில் விதிகளைப் பின்பற்றுவது போல, கல்வி நிலையங்களிலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். சீருடை விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளுங்கள். கல்வி நிலையங்களுக்கு வெளியே என்ன உடையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கல்வி நிலைய வளாகத்தில் சீருடைக்கு மட்டுமே அனுமதி” எனத் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷின் இத்தகைய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories