இந்தியா

"பாம்பு பிடிப்பது மட்டுமல்ல இதுவும் செய்வார்": அதிசய மனிதன் வா வா சுரேஷின் சுவாரஸ்ய குறிப்புகள் இங்கே!

பாம்பு கடித்ததால் சுயநினைவை இழந்த வா வா சுரேஷ் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

"பாம்பு பிடிப்பது மட்டுமல்ல இதுவும் செய்வார்": அதிசய மனிதன் வா வா சுரேஷின்  சுவாரஸ்ய குறிப்புகள் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் பாம்பு பிடிப்பதில் வல்லவர். அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவரை அறியாத கேரள மக்களே இருக்க முடியாது.

இப்படி இருக்கையில், அண்மையில் கோட்டயம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாம்பு புகுந்ததால் சுரேஷ் அங்குச் சென்று பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் போட முயன்றபோது அவரை பாம்பு அடித்தது.

இதனால் சுயநினைவு இழந்த வாவா சுரேஷ் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். கேரள அரசின் தரமா சிகிச்சை காரணமாக தற்போது வா வா சுரேஷ் முழுமையா குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவர் மீண்டு வந்ததது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் அனைவருக்கும் வா வா சுரேஷை பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் என்று மட்டுமே தெரியும். ஆனால் பாம்பு பிடிப்பதுடன் சேர்ந்து பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது நம்மில் பலரும் தெரியாது.

இவரை ஏற்கனவே பாம்பு கடித்தால் 5 முறை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். இவரைப் பலமுறை பாம்புகள் கடித்துள்ளதால் உடலில் தானாகவே விஷங்களுக்கு எதிரான ஆண்டி பாடி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஒரு யூ.டி.யூ.ப் சேனல் நடத்தி வருகிறார். இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். அதேபோல் முடியாத மக்களுக்கும் உதவிவருகிறார். இவரின் இந்த சேவையைப் பாராட்டி கேரள வனத்துறை அரசு பணி வழங்கியது. அப்போது அவர் இந்த வேலையைத் துறந்து மக்களுக்காகவே வேலை செய்ய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories