இந்தியா

"பணத்த எடு இல்ல சுட்டுடுவேன்".. துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம்: மும்பையில் அதிர்ச்சி!

பட்டப்பகலில் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பணத்த எடு இல்ல சுட்டுடுவேன்".. துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம்: மும்பையில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மும்பையில் உள்ள மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் நேற்று முகக்கவசம் அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் புகுந்தது. இதைப்பார்த்து நிதி நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த கும்பல், 'அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுங்க, இல்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடுவேன்' என ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால், ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்த ரூ. 77 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து போலிஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.

பின்னர் அங்கு வந்த போலிஸார் நிதி நிறுவனத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக கூடும் இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories