இந்தியா

’Pushpa Thaggede le’ புஷ்பா படம் பார்த்து செம்மரம் கடத்தல்; மராட்டிய போலிஸிடம் வசமாக சிக்கிய லாரி டிரைவர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொருட்களை ஏற்றிச் செல்வதாக குறிப்பிட்டு லாரியின் முன்புறம் ஸ்டிக்கரையும் யாசீன் ஒட்டியிருக்கிறார்.

’Pushpa Thaggede le’ புஷ்பா படம் பார்த்து செம்மரம் கடத்தல்; மராட்டிய போலிஸிடம் வசமாக சிக்கிய லாரி டிரைவர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தால் கவரப்பட்டு திரைப்பட பாணியிலேயே செம்மரங்களை கடத்தியவர் மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கிறார்.

கைதான கடத்தல் நபர் லாரி ஓட்டுநர் யாசீன் இனாயதுல்லா ஆவர். அண்மையில் புஷ்பா படத்தை பார்த்த இந்த நபர் தனது லாரியிலேயே செம்மரங்களை கடத்தியிருக்கிறார்.

கர்நாடக ஆந்திர எல்லையில் இருந்து செம்மரங்களை கடத்திக் கொண்டு மகாராஷ்டிராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்திருக்கிறார் யாசீன்.

அப்போது சங்லி மாவட்டத்தின் மீரஜ் நகர் காந்தி செளக் பகுதியை கடக்கும் போதுதான் மகாராஷ்டிரா போலிஸாரால் வசமாக பிடிபட்டிருக்கிறார். அப்போது அவரது லாரியில் இருந்து 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் எப்படி பால் ஏற்றி வரும் லாரியில் செம்மரங்களை அடியில் வைத்து மேலே பால் டேங்கை வைத்திருப்பாரோ அதேப்போன்று யாசீனும் தான் வந்த லாரியில் செம்மரக்கட்டைகளை வைத்து அதன் மேல் காய்கறிகள், பழங்கள் அடங்கிய பெட்டியை வைத்து மறைத்து கடத்தியிருக்கிறார்.

இதுபோக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பொருட்களை ஏற்றிச் செல்வதாக குறிப்பிட்டு லாரியின் முன்புறம் ஸ்டிக்கரையும் யாசீன் ஒட்டியிருக்கிறார்.

ஆந்திராவில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் வரை சுலபமாக எங்கும் சிக்காமல் இருந்த யாசீன் மகாராஷ்டிராவில் சிக்கியிருக்கிறார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories