இந்தியா

சோதனை செய்த போலிஸாரை தாக்கிய கள்ளச்சாராய கும்பல்.. ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்!

ஆந்திராவில் போலிஸாரை கள்ளச்சாராய கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை செய்த போலிஸாரை  தாக்கிய கள்ளச்சாராய கும்பல்.. ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலம், கோதாவரி மாவட்டத்திற்குட்பட்ட ஆலமூர் பகுதி. இந்த பகுதியில் இருக்கும் ஆற்றைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து கோதாவரி ஆற்றுப் பகுதியில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படகு ஒன்று வந்தது. அதை சோதனை செய்தபோது ஐந்துக்கும் மேற்பட்ட பீப்பாய்களில் கள்ளச்சாராயம் இருந்தது. இதையடுத்து போலிஸார் அதைப் பறிமுதல் செய்ய முயன்றனர்.

அப்போது திடீரென படகில் இருந்த கும்பல் போலிஸார் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் போலிஸாருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பம் தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் கள்ளச்சாராயம் காய்ச்சி படகில் எடுத்து வந்த 6 பேரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories