இந்தியா

“நான் ஏன் லஞ்சம் கொடுக்கணும்?” - அரசு மருத்துவமனையில் கடுமையாக சண்டை போட்ட பெண்கள்.. பீகாரில் அதிர்ச்சி!

பீகார் மாநிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


“நான் ஏன் லஞ்சம் கொடுக்கணும்?” - அரசு மருத்துவமனையில் கடுமையாக சண்டை போட்ட பெண்கள்.. பீகாரில் அதிர்ச்சி!
DJ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பீகார் மாநிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தின் பிரசவ வார்டு அருகே இருவர் தலைமுடியைப் பிடித்து தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநில அரசு ஆரம்ப சுகாதார மையம் ஒன்றில் குழந்தைக்கு பி.சி.ஜி எனப்படும் காசநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக பெண் ஒருவர் வந்திருக்கிறார். அங்கு வேலை பார்க்கும் செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றால் 500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்“நான் ஏன் உங்களுக்கு தரவேண்டும்? அரசு மருத்துவமனைதானே இது?” எனக் கேட்டிருக்கிறார். இந்நிலையில் 500 ரூபாய் வாங்கவேண்டும் என்பதற்காக வாக்குவாதம் செய்திருக்கிறார் செவிலியர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் மாற்றி மாற்றி சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த ஒருவர் இருவரையும் தடுத்து நிறுத்த முயற்சித்தார்.

ஆனால் செவிலியர் தனது காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கினார். சுகாதார மையத்தின் பிரசவ வார்டு அருகே இருவர் தலை முடியை பிடித்து அடித்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த பெண்ணும் அங்கன்வாடி சுகாதார ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் செயல் பீகார் மக்களிடையே அரசு ஊழியர்களின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இருவர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இச்சம்பவம் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

- உதயா

banner

Related Stories

Related Stories