இந்தியா

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சர் மகன்: பீகாரில் பரபரப்பு!

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டியிருக்கிறார் பீகாரின் பாஜக அமைச்சரின் மகன்.

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சர் மகன்: பீகாரில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாஜக அமைச்சர்களின் மகன்களின் அட்டூழியங்கள் நாட்டில் ஆங்காங்கே அதிகரித்த வண்ணம் உள்ளது. உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றி பாஜக அமைச்சரின் மகன் கொன்ற வழக்கு இன்றளவும் விசாரணையில் உள்ளது.

இப்படி இருக்கையில், பீகாரின் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள அம்மாநில பாஜக தலைவரான நாராயண பிரசாத்தின் மகன் பப்லு பிரசாத் அவர்களது நிலத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை விரட்ட வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு சிலரை தாக்கவும் செய்திருக்கிறார்.

கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய பாஜக அமைச்சர் மகன்: பீகாரில் பரபரப்பு!

மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ஹர்தியா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாஜக அமைச்சர் மகனின் செயலால் ஆத்திரமடைந்த அக்கிராமத்து மக்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு அவரது காரை அடித்து நொறுக்கி, பப்லு பிரசாத்தையும் தாக்கியிருக்கிறார்கள்.

தகவல் அறிந்த போலிஸார் உடனடியாக விரைந்து மக்களை சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர். ஆனால் இது தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் நாராயண பிரசாத், தனது நிலத்தை கிராம மக்கள் அபகரிக்க எண்ணியே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என மகனை காப்பாற்ற முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் மக்கள் மீது பழி சுமத்தியிருக்கிறார்.

ஆனால் பப்லு பிரசாத்தும் அவரது கூட்டாளிகள் என நால்வரும் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது துப்பாக்கியால் சுட்டு விரட்டியும் அவர்களை தாக்கியதையும் அங்கிருந்த சிலர் நேரடியாக கண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து பீகாரி எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் சக்தி சிங் யாதவ், பாஜக அமைச்சர் மகனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு சிறுவர்களை தாக்க அமைச்சர் மகனுக்கு உரிமம் கொடுத்தது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாஜக அரசால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு இதுவே சாட்சி என்றும் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories