இந்தியா

பறிபோன வேலை.. போலி இணையதளத்தை உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்து மோசடி : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!

போலி இணையதளத்தை உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்த பொறியாளரை போலிஸார் கைது செய்தனர்.

பறிபோன வேலை.. போலி இணையதளத்தை உருவாக்கி டிக்கெட் விற்பனை செய்து மோசடி : பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாஜ்மஹால் உள்ளிட்ட சுற்றுலா தளங்களின் பெயரை பயன்படுத்தி, இணையங்களைப் போலியாக உருவாக்கி சுற்றுலாப் பயணிகளிடம் டிக்கெட் விற்பனை செய்து பண மோசடி நடைபெற்று வருவதாக டெல்லி சைபர் கிரைம் போலிஸாருக்கு புகார் வந்துள்ளது.

இதையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இதில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சந்த் என்ற வாலிபர் தான் போலியாக இணையத்தை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

பின்னர் போலிஸார் சந்தீப் சந்தைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சந்தீப் சந்த உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக இவரது வேலை பறிபோனது. இதனால் செலவுக்குப் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். பின்னர் போலிஸார் சுற்றுலா தளங்களின் பெயர்களின் இணையத்தை உருவாக்கியுள்ளார்.

இதில், டிக்கெட் விற்பனை செய்து சுற்றுலாப் பயணிகளிடம் பணமோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது இணையத்தில் பணம் செலுத்தி டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் ஏமாந்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் அவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories