இந்தியா

BMTC பேருந்தில் திடீர் தீ விபத்து; 40 பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி? பெங்களூரில் நடு ரோட்டில் பரபரப்பு!

கர்நாடக மாநிலத் தலைநகரமான பெங்களூரில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த பி.எம்.டி.சி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பேருந்து எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BMTC பேருந்தில் திடீர் தீ விபத்து; 40 பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி? பெங்களூரில் நடு ரோட்டில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூரு சாமராஜ பேட்டை பகுதியில் 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பி.எம்.டி.சி பேருந்து சென்றபோது இன்ஜினில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மெஜஸ்டிக்கில் இருந்து தீபாஞ்சலிநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென புகை கிளம்பியிருக்கிறது. உஷாரான ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு பேருந்தில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகளை கீழே இறக்கினார்.

BMTC பேருந்தில் திடீர் தீ விபத்து; 40 பயணிகள் உயிர் பிழைத்தது எப்படி? பெங்களூரில் நடு ரோட்டில் பரபரப்பு!

இன்ஜினில் பற்றிய தீ பேருந்து முழுவதும் பரவியதால் பேருந்து எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner
live tv