இந்தியா

அருணாச்சல பிரதேச சிறுவனை சிறைபிடித்த சீன ராணுவம்.. எல்லையில் மீண்டும் மோதலா - நடந்தது என்ன?

சீன ராணுவம் சிறுவனைக் கடத்திச் சென்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேச சிறுவனை சிறைபிடித்த சீன ராணுவம்.. எல்லையில் மீண்டும் மோதலா - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அருணாச்சல பிரதேச மாநிலம், அப்பர் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிராம் தாரோன். இவரது நண்பர் ஜாணி யாயிங். சிறுவர்களான இவர்கள் இருவரும் இந்திய மற்றும் சீன எல்லையை ஒட்டிய லுங்டா ஜோர் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

அப்போது, சீன ராணுவம் இவர்கள் இருவரையும் சிறை பிடிக்க முயன்றுள்ளது. இதில் ஜாணி யாயிங் அவர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து சிறுவன் மிராம் தாரோனை சீன ராணுவத்தினர் சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு அருணாச்சல பிரதேச தொகுதி எம்.பி தபிர் காவோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். மேலும் சிறுவனை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அருணாச்சல பிரதேச மக்களைச் சீன ராணுவம் சிறைபிடிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2020ம் ஆண்டு அப்பர் சுபன்சிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களைச் சீன ராணுவம் சிறைபிடித்தது. பின்னர் ஒருவாரம் கழித்து அவர்களை விடுவித்தது.

லடாக்கில் இருந்து அருணாச்சல் பிரதேசம் வரை 3400 கி.மீ எல்லையை இந்தியா சீனாவுடன் பகிர்ந்துகொள்கிறது. இதனால் இருநாட்டிற்கும் இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சீனா இந்திய எல்லைப்பகுதியில் தொடர்ச்சியாகப் பாலம் கட்டுவது, வீடு கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories