இந்தியா

"பொய்களால் திக்குமுக்காடிய TELEPROMPTER": மோடியின் உரையைக் கிண்டல் செய்த ராகுல்!

பிரதமர் நரேந்திர மோடியின் டாவோஸ் மாநாட்டு உரையை ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

"பொய்களால் திக்குமுக்காடிய TELEPROMPTER": மோடியின் உரையைக் கிண்டல் செய்த ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் காணொலி வழியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தனது பேச்சை நிறுத்தி நிறுத்திப் பேசினார். இதனால் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குச் சற்று அதிர்ச்சி ஏற்பட்டது.

பின்னர், மீண்டும் பிரதமர் மோடி சரளமாகத் தனது பேச்சைத் துவங்கினார். இதையடுத்து டெலிப்ராம்ப்டர் இந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நிமடங்கள் அவரால் பேசமுடியாமல் திணறியது தெரியவந்தது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி திணறித் திணறிப் பேசும் இந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் மோடியின் இந்த பேச்சைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை கிண்டல் செய்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டரில், 'டெலிப்ராம்ப்டரால் கூட நிறையப் பொய்களை ஏற்க முடியவில்லை' என கிண்டனல் செய்து பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories