இந்தியா

2 நாளில் 2 அமைச்சர்கள், 5 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இருந்து விலகல்.. நெருக்கடியில் யோகி!

உத்தர பிரதேசத்தில் 2 நாளில் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 நாளில் 2 அமைச்சர்கள், 5  எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இருந்து விலகல்.. நெருக்கடியில் யோகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி துவங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி வருவது உ.பி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து அகிலேஷை நேரில் சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து சுவாமி பிரசாத் மவுரியா கட்சியிலிருந்து விலகிய சில மணி நேரத்திலேயே ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் வினய் சாக்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

நேற்று யோகி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இன்று மற்றொரு சட்டமன்ற உறுப்பினரும் விலகியுள்ளார்.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் வர்மா இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2 நாட்களில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியது யோகி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories