இந்தியா

வரிசைகட்டி பா.ஜ.கவில் இருந்து விலகும் அமைச்சர்கள், MLAக்கள் - அதிர்ச்சியில் ஆதித்யநாத்!

உத்தர பிரதேச மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலகி வருவது பா.ஜ.கவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வரிசைகட்டி பா.ஜ.கவில் இருந்து விலகும் அமைச்சர்கள், MLAக்கள் - அதிர்ச்சியில் ஆதித்யநாத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி துவங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இருந்தும், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் அடுத்தடுத்து விலகி வருவது உ.பி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றுதான், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். பின்னர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷை நேரில் சந்தித்துப் பேசினார்.

சுவாமி பிரசாத் மவுரியா கட்சியிலிருந்து விலகிய சில மணி நேரத்திலேயே ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் வினய் சாக்யா ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர்.

வரிசைகட்டி பா.ஜ.கவில் இருந்து விலகும் அமைச்சர்கள், MLAக்கள் - அதிர்ச்சியில் ஆதித்யநாத்!

இவர்கள் பா.ஜ.கவில் இருந்து விலகி 24 மணிநேரம் ஆவதற்குள் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகானும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து இவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தில் “நான் அர்ப்பணிப்புடன் உழைத்தேன், ஆனால் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மீதான இந்த அரசின் அடக்குமுறை அணுகுமுறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதால் வேதனையடைந்து பதவி விலகுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து கட்சியிலிருந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி மாற்றுக் கட்சியில் சேருவது யோகி ஆதித்யநாத்திற்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories